நடிகை ஷோபனாவுக்கு கொரோனா தொற்று உறுதி- ஒமைக்ரானா?

corona actress shobana omicron
By Yathrika Jan 10, 2022 06:20 AM GMT
Report

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பிரபலங்களை பற்றி அதிகம் வரும் செய்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டது தான்.

90களில் கதாநாயகியாக இருந்து மக்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், தளபதி, சிவா என வெற்றிப்பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஷோபனா ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாகியுள்ளாராம்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது. தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US