சம்பத் ராம் சென்ற கார் பயங்கர விபத்தில் சிக்கியது... பிரபலத்தின் தற்போதைய நிலை
சம்பத் ராம்
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம்.
எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்து பிரபலமானார்.
பின் வல்லரசு, தீனா, தவசி, ரெட், ரமணா, ஜனா, ஆஞ்சநேயா, திருப்பாச்சி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் போலீஸ் ரோலில் நடித்துள்ளார்.
பயங்கர விபத்து
சென்னை கிண்டி அருகே சம்பத் ராம் காரில் சென்றுகொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.
பின்னால் வந்த லாரி மோதியதில் இவரின் கார் பின்பக்கம் சுத்தமாக நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த சம்பத்ராம் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
