அஜித்தின் துணிவு படத்தை திரையிட்டவர்களுக்கு லியோ படக்குழு இப்படி செய்துள்ளதா?- பிரபலம் சொன்ன விஷயம்
அஜித்-விஜய்
எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில் இருந்து முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சண்டை நடந்துகொண்டு தான் வருகிறது.
ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ், சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி என இப்படி போய்க் கொண்டே தான் இருக்கும்.
இதில் அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை தான் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக போய்க் கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் பிரபலங்கள் பலருமே சண்டை போடும் ரசிகர்களின் குறிப்பிட்ட நடிகர்கள் இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்கும் என்று புலம்பி வந்தார்கள்.
அவர்களோ நண்பர்களாக இருக்கிறார்கள், ரசிகர்களின் சண்டை மட்டும் இப்போதும் ஓயவில்லை. ஆனால் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை, கொஞ்சம் பரவாயில்லை என்றே கூறலாம்.
அதிரடி தகவல்
இந்த வருடம் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு இரண்டு படங்களும் ஒரே நாள் ரிலீஸ் ஆனது, தமிழகமே கோலாகலமாக இருந்தது.
லியோ பட தயாரிப்பு குழு வாரிசு படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் படத்தை கொடுத்துள்ளார்கள், வாரிசு படத்தை திரையிடாதவர்களுக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்ததாக Raane Paradise திரையரங்க உரிமையாளர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
[2XQ808

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
