ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க
ஜீ தமிழ்
ஜீ தமிழில் 2025 இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் கெட்டி மேளம்.
இந்த சீரியல் ஜீ கன்னடத்தில் ஒளிபரப்பாக லட்சுமி நிவாஸா என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வந்தது. இந்த புதிய தொடரில் பொன்வண்ணன், பிரவீனா, சிப்பு சூரியன், சாயா சிங், விராட், சௌந்தர்யா ரெட்டி என பல கலைஞர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதுவரை கெட்டி மேளம் சீரியல் 110 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது.
திடீர் முடிவு
சிவராமன்-லட்சுமி தம்பதி தங்களது பிள்ளைகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்துவைத்து சொந்த வீடு வாங்க வேண்டுமே என்பதே கனவு.

நீயெல்லாம் நாயகியா நடிக்க மாட்ட, நீயெல்லாம் Artistஆ.. அய்யனார் துணை நடிகை மதுமிதாவை விமர்சித்த இயக்குனர், யார் அது?
இதனை நோக்கிய மிடிஸ் கிளாஸ் குடும்பத்தின் கதையாக கெட்டி மேளம் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. தொடரும் மக்களிடம் வரவேற்பு பெற்றுவரும் நிலையில் ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால், கெட்டி மேளம் சீரியலை இன்னும் 2, 3 மாதங்களில் முடிக்க சீரியல் குழு முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.