விஜய்யின் லியோ பட ரசிகர்களுக்கு வந்த ஒரு ஷாக்கிங் நியூஸ்- இப்படி ஆனதே?
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ்-விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது கூட்டணி அமைத்து உருவாக்கி வெளியிட்ட படம் லியோ.
விஜய்யை தாண்டி த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா என பலர் நடிக்க படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி இருந்தது.
வெளியான அன்றே ரூ. 148 கோடி வசூலித்த இப்படம் தாறுமாறு வசூல் வேட்டையில் உள்ளது, ஜெயிலர் பட வாழ்நாள் சாதனையை முறியடிக்குமா என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயிலர் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலிக்க 12 நாள் முடிவில் விஜய்யின் லியோ ரூ. 540 கோடி வரை வசூலித்துள்ளது என்கின்றனர்.
ஷாக்கிங் தகவல்
படம் ஒருபக்கம் வசூலிக்க படக்குழு வரும் நவம்பர் 1ம் தேதி லியோ வெற்றிவிழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். காவல்துறையும் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் டிக்கெட்டுடன் ஆதார் அட்டை எல்லாம் எடுத்து வர வேண்டும் என செய்திகள் வந்தன.
ஆனால் இப்போது வந்துள்ள செய்தி என்னவென்றால் விஜய்யின் லியோ பட நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அனுமதி இல்லையாம், விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதர்ச்சியாக உள்ளது.