அஜித்தின் வலிமை பட ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி, ரிலீஸ் பற்றி இல்லை- இது ஷாக்கிங் தகவல்
2022 புதிய வருடம் ஆரம்பித்துவிட்டது, இந்த வருடத்தில் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்ப்பது வலிமை படத்தை தான்.
படம் 2020திலேயே தொடங்கியது, கடந்த வருடமே வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா காரணத்தால் பட படப்பிடிப்பே தள்ளிப்போனது. பின் நோய் தொற்று கொஞ்சம் குறைய வேகமாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
படக்குழுவும் பட ரிலீஸிற்கான புரொமோஷனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் தான் அஜித் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால் வலிமை படத்திற்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா செய்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் தான் செய்கிறாராம்.
பின்னணி இசைக்கு பெயர் போனவர் யுவன், அவர் இந்த படத்தில் பாடல்கள் மட்டும் இசையமைக்கிறாரா என்று ரசிகர்கள் ஷாக்கில் உள்ளார்கள்.