அஜித் பட வெற்றியால் அதே இயக்குனர் தான் வேண்டும் என கூறிய விஜய்.. இதுவரை வெளிவராத சம்பவம்
அஜித் - வாலி
அஜித் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. இதில் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த படங்களில் ஒன்று தான் வாலி.
எஸ்.ஜே. சூர்யா அறிமுக இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியடைந்து. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா இயக்கிய திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார்.
ஆனால், வாலி வெற்றியை தொடர்ந்து உடனடியாக எஸ். ஜே. சூர்யா விஜய்யை வைத்து படம் இயக்கவில்லையாம். வாலி படத்திற்கு பின் பிரபு தேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தாராம் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. அது தான் குஷி படத்தின் கதை என்கின்றனர்.
விஜய் - குஷி
அஜித்தின் வாலி படத்தின் மாபெரும் வெற்றியை பார்த்த விஜய் உடனடியாக எஸ்.ஜே. சூர்யாவுடன் இணையவேண்டும் என முடிவு செய்துள்ளார். இதனால் உடனடியாக அவர் இயக்கத்தில் படம் நடிக்கவேண்டும் என நினைத்த விஜய், குஷி படத்தில் நடிக்க ஆற்வம் காட்டியுள்ளார்.
இதன்பின் பிரபு தேவாவை வைத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கவிருந்த படத்தில் விஜய் ஹீரோவாக குஷி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி தான் குஷி படம் உருவானது என பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.