ஆஸ்கர் விருது மேடையில் பிரபல நடிகரை திடீரென கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்- பரபரப்பான வீடியோ
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டும் விதமாக நடக்கிறது ஆஸ்கர் விருது விழா. கொரோனா பிரச்சனை இருந்தாலும் நிறைய படங்கள் திரையில் வெளியாகி இருந்தன.
நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்
விழா மேடையில் க்ரிஸ் ராக் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடை ஏறிய நடிகர் வில் ஸ்மித் நடிகரை பளார் என கன்னத்தில் அறைந்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வில் ஸ்மித் கோபத்தின் காரணம்
எதற்காக வில் ஸ்மித் இப்படி செய்தார் என்றால் ராக், ஸ்மித்தின் மனைவியின் மொட்டையை வைத்து ஏளனமாக பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த வில் ஸ்மித் மேடையிலேயே நடிகரை அடித்துள்ளார்.
இந்த சம்பவம் ஆஸ்கர் விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.