லோகேஷ் - அல்லு அர்ஜுன் படத்தின் கதாநாயகி யார்? இந்த பாலிவுட் நடிகை தானா?
அல்லு அர்ஜுன் - லோகேஷ்
கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, கைதி 2 டேக்ஆஃப் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் DC படம் உருவாகிறது என்றாலும், அவர் இயக்கத்தில் வரப்போகும் அடுத்த படம் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், அல்லு அர்ஜுன் - லோகேஷ் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் அறிவித்திருந்தனர். அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக வந்துள்ள அறிவிப்பு அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஹீரோயின்
இப்படத்தின் ஹீரோயின் யார் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
