மகளுக்காக நடிகை ஸ்ரேயா எடுத்துள்ள முடிவு - அப்படி என்ன கூறியுள்ளார் பாருங்க..

Shreya RRR
By Jeeva Dec 21, 2021 10:50 AM GMT
Report

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர், தற்போது இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கபடும் RRR திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மகளுக்காக நடிகை ஸ்ரேயா எடுத்துள்ள முடிவு - அப்படி என்ன கூறியுள்ளார் பாருங்க.. | Shreya About Daughter

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் "சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன. எனது மகள் ராதா என் படங்களைப் பார்த்து பெருமைப்படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

மகளுக்காக நடிகை ஸ்ரேயா எடுத்துள்ள முடிவு - அப்படி என்ன கூறியுள்ளார் பாருங்க.. | Shreya About Daughter

நான் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இருபது ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த நீண்ட பயணத்திற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம். இன்னும் 20 ஆண்டுகள் ரசிகர்களின் அன்பை பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

பார்சிலோனாவில் வசித்து வரும் நடிகை ஸ்ரேயாவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு லாக் டோவ்னில் பிறந்துள்ளது. ராதா என்ற பெண் குழந்தை அவருக்கு பிறந்ததை மிகவும் சர்ப்ரைஸாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US