நடிகை ஸ்ரேயாவின் மகளுக்கு பிறந்தநாளா! அவரே சொன்ன விஷயம்..
தமிழ், தெலுங்கு என தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஸ்ரேயா.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யா தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா பார்சிலோனா நகரில் செட்டிலாகி அங்கு வாழ்ந்து வருகிறார்.
மேலும் தனக்கு ஏற்கனவே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறந்து 9 மாதமாகிவிட்டதாகவும் தெரிவித்து அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சியளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவிட்டு "அவள் இன்று ஒரு வயதை எட்டுகிறாள். கடந்த வருடம் 7.40 க்கு அவள் பிறந்தாள்.
அவளுக்கு என்றுமே எங்கள் அன்பு உண்டு". மேலும் தன்னுடைய தாய், தந்தை, நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.