நடிகை ஸ்ரேயா மகளின் பெயர் என்ன தெரியுமா? முதல்முறையாக வெளியான தகவல்..
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகவும், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்தவர் நடிகை ஸ்ரேயா.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.
மேலும் கடந்த 2020 லாக்டோவ்னில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயாவின் மகளுக்கு "ராதா" என பெயரிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.
ராதா என்ற ரஷிய மொழியில் சந்தோஷம் (Happy) என்று அர்த்தம், சமஸ்கிருதத்திலும் ராதா என்றால் சந்தோஷம் (Happy) என்பது அர்த்தம். இதனால் ஸ்ரேயா மற்றும் அவரின் கணவர் ராதா என பெயர் வைத்துள்ளனர்.