இனி அப்படி பாடமாட்டேன்.. ஸ்ரேயா கோஷல் இப்படி சொல்லிட்டாரே
பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் முன்னணி பாடகியாக இருப்பவர். அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் நாடு முழுவதும் இருக்கிறது.
அவரது மெலோடியான பாடல்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவார்கள். அதே நேரத்தில் அவரது மற்ற பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின்றன. அப்படி ஒரு பாடல் தான் Chikni Chameli. கத்ரீனா கைப் மிக கவர்ச்சியாக அந்த பாடலுக்கு ஆடி இருப்பார்.
இனி அது போன்ற பாடல்களை பாட மாட்டேன் என சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

அவமானமாக கருதவில்லை
ஸ்ரேயா கோஷல் அப்படி பேசியதற்கு அதிகம் ட்ரோல்கள் வந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த அவர் "அப்படி ஒரு பாடலை பாடியதற்காக அவமானமாக கருதவில்லை. ஆனால் இனிமேல் அப்படி ஒரு பாடலை பாடமாட்டேன் என்று தான் கூறினேன்."
"ஒரு பாடல் ஹிட் ஆனால், அந்த பாடலை கச்சேரிகளில் மேடையில் பாட வேண்டி இருக்கிறது. குழந்தைகள் முன்பும் இப்படிப்பட்ட வரிகள் உடன் பாடல்களை பாட சங்கடம் ஏற்படுகிறது."
"Chikni Chameli பாடல் பாடிய நேரத்தில் நான் என்ன பாடுகிறேன் என எனக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் நான் அதிகம் mature ஆக இல்லை" என ஸ்ரேயா கோஷல் கூறி இருக்கிறார்.

Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri