முதன் முதலில் தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்..வைரலாகும் புகைப்படம்!
இந்திய அளவில் தன் இன்னிசை குரலால் ரசிகர்களை கட்டிப்போடும் பாடகிகளில் இந்த தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமானவராக வளம் வருபவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.
தன் தனித்துவமான மெல்லிசை குரலால் ஹிந்தி,பெங்காலி,தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடலுக்கு பாடல்கள் பாடி விருதுகளையும் வென்றிருக்கிறார் இவர்.
தமிழில் AR ரகுமான், இமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசைமைப்பாளர்களின் பாடலுக்கு பாடல்கள் பாடியிருக்கும் ஸ்ரேயா சில்லுனு ஒரு காதல் படத்தில் பாடிய முன்பே வா என் அன்பே வா பாடலுக்கு தமிழக அரசின் விருதையும் பெற்றிருந்தார்.
உருகுதே மருகுதே, சொல்லிட்டாளே அவ காதல, நினைத்து நினைத்து பார்த்தாள், மன்னிப்பாயா போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் இவர் குரலால் மேலும் இனிமை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு கடந்த ஆண்டு மே மாதம் தான் கர்பமானதை அறிவித்த ஷ்ரேயாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையின் புகைப்படத்தை வெளிப்படுத்தாமல் இருந்த இவர் தற்போது முதன் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.