அந்த ஐட்டம் பாடலை பாடியதற்காக வெட்கப்படுகிறேன்.. ஓபனாக கூறிய ஸ்ரேயா கோஷல்
ஸ்ரேயா கோஷல்
இந்தியாவில் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல்.
ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்டவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் எந்த மொழியில் பாட வேண்டும் எல்லாவற்றையும் அசால்ட்டாக பாடி முடிப்பவர். தற்போது இவர் சினிமா பாடல்கள் பாடுவதை தாண்டி இசைக் கச்சேரிகளில் அதிகம் பாடி வருகிறார்.
ஸ்ரேயா கோஷல் Live In Concert சென்னையில் மார்ச் 1ம் தேதி YMCA Groundல் நடைபெற உள்ளது.
பாடகி பேட்டி
தொடர்ந்து நிறைய இசைக் கச்சேரிகள் நடத்திவரும் பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ஒரு ஐட்டம் பாடலை பாடியதற்காக வருத்தப்படுகிறேன் என கூறியுள்ளார்.
அக்னி பாத் படத்தில் இடம்பெற்றுள்ள சிக்னி சமேலி என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன எனத் தெரியாமல் பாடுகிறார்கள். அப்பாடலை பாடிக்கொண்டு நடனமும் ஆடுகிறார்கள், பாடல் நன்றாக இருப்பதாக என்னிடமே கூறுகிறார்கள்.
யாராவது இவ்வாறு கூறினால் எனக்கு சங்கடமாக உள்ளது. 5, 6 வயது குழந்தைகள் இதுபோன்ற பாடல் வரிகளைப் பாடுவது சரியல்ல, இந்தப் பாடலை பாடியதற்காக நான் வெட்கப்படுகிறேன் என கூறியுள்ளார்.

3 மணி நேரத்தில் சென்னை டூ கொல்கத்தா; கடல் மேல் பறக்கும் கார் - 600 ரூபாயில் அசத்தல் திட்டம் IBC Tamilnadu
