ரஜினி மகள் தயாரிக்கும் பொன்னியின் செல்வன் இயக்குனர் மாற்றம்! இவர்தான்
சௌந்தர்யா ரஜினி தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் வெப் சீரிசில் புதிய மாற்றம் .
பொன்னியின் செல்வன்
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் கல்கி நாவலை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டது. படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா, பிரபு, சரத் குமார், பார்த்திபன் போன்ற பல முன்னணி நடிகர்கர் நடித்துள்ளனர்.
இப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தது. அடுத்து இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
வெப் சீரிஸ்
வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் கோச்சடையான் படங்களை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் "புது வெள்ளம் "- பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் வெப் சீரிஸ் எடுக்க போவதாக 2019-ஆம் ஆண்டு அறிவித்தார்.
இந்த படத்தை எம்எக்ஸ் பிளேயர் நிறுவனத்துடன் சேர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க உள்ளார்.
இயக்குனர் மாற்றம்
பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ் குறித்து எந்த தகவலும் வராத நிலையில், தற்போது தொடரை 8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் போன்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.
இதற்க்கு முன்பு வெப் சீரிஸ் இயக்கி வந்த ஷரத் ஜோதிக்கு பதிலாக இனி ஸ்ரீ கணேஷ் இயக்க போகிறார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
வணங்கானுக்கு பதில் இன்னொரு படத்தை கையில் எடுக்கும் சூர்யா? மீண்டும் மாஸ் கூட்டணி

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
