ஸ்ரேயா சரண் கணவர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?
மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி த பாஸ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் ஸ்ரேயா சரண். அவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான Andrei Koscheev என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு ராதா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாக சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டனர். தற்போது அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி இருக்கும் நிலையில் ஸ்ரேயா படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் Andrei Koscheevக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்ப்பட்ட நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை முடிந்து தற்போது குணமடைந்து இருப்பதாக ஸ்ரேயா தெரிவித்து உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக குழந்தை ராதாவை கணவரால் தூக்க கூட முடியவில்லை என ஸ்ரேயா மேலும் கூறி உள்ளார்.