சூர்யாவுடன் இணையும் 41 வயது நடிகை.. அதுவும் ஒரே ஒரு பாடலுக்காக
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 44. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் இப்படம் கேங்ஸ்டர் கதைக்கத்தில் உருவாகி வருகிறது.
சூர்யா
மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயா இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது என்று கூறப்படுகிறது.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
