"திருமணம் செய்து கொள்வோமா என்பது தெரியாது" - காதலனை கரம் பிடிப்பது குறித்து ஸ்ருதி சொன்ன விஷயம்..

Shuruthi Hassan
By Jeeva Nov 23, 2021 01:40 PM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் லாபம் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பிரபாஸின் சலார் படத்தில் நடித்துள்ளார், தற்போது பாலகிருஷ்ணா திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன் காதலன் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘சினிமா நடிகையாக இருப்பதால், இதற்கு முன்பு சில விஷயங்களை வெளியே சொல்லாமல் மறைத்தேன்.

சில வருடங்களாக நான் சிங்கிளாக இருந்தேன். இப்போது சாந்தனு ஹசாரிகாவை உயிருக்குயிராக காதலிக்கிறேன். ஆங்கில நாவல்கள், பெயிண்டிங், கிராபிக்ஸ் போன்ற விஷயங்களில் எனது எண்ணமும், அவரது எண்ணமும் ஒரேமாதிரி இருந்ததால் ஒருவரை ஒருவர் விரும்பினோம்.

என் தோழிக்கு பெயிண்டிங் பரிசளித்தபோது அவர் எனக்கு அறிமுகமானார். பிறகு ஆன்லைனில் பேசினோம். நிறைய விஷயங்களில் எங்கள் எண்ணம் ஒரேமாதிரி இருந்ததால் காதலிக்க தொடங்கினோம். பிற்காலத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்று தெரியாது’ என தெரிவித்துள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US