தனுஷ் - ஸ்ருதி ஹாசன் சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த நடிகை
தனுஷ் - ஸ்ருதி சர்ச்சை
தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 3. இப்படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். இப்படம் வெளிவந்த நாளில் இருந்து தனுஷ் - ஸ்ருதி ஹாசனை சேர்த்து வைத்து பல விதமான வதந்திகள் எழுந்தது.

இன்று வரை அந்த வதந்திகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது :
' இந்த செய்தி குறித்து பலமுறை நான் விளக்கம் கொடுத்ததும் ஏன் இது எங்களை தற்போதும் பின் தொடர்கிறது என தெரியவில்லை. இது ஒன்று மட்டுமல்ல, என்னை சுற்றி இதுபோன்ற ஆயிரம் வதந்திகள் வருகிறது'.

'என் வாழ்க்கையில் தனுஷ் ஒரு முக்கியமான நண்பர். 3 படத்தில் நான் நன்றாக நடிப்பேனா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அப்போது என் மீது அவர் நம்பிக்கை வைத்தார். இதுபோன்ற வதந்திகள் வருவதால் நான் மக்களை குறை சொல்ல விரும்பவில்லை'.
'அதற்காக, எப்போதும்என் மீது சிப் பொருத்தி நான் போகும் இடம் எல்லாம் பாருங்கள் என்று நான் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை' என கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு இந்த நடிகர் விலகிவிட்டாரா?- ரசிகர்கள் ஷாக்