நடிகை ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர் கேட்ட விஷயம் - பதிலுக்கு அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா
தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.
தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் ஒன்றாக கலந்துரையாடியுள்ளார் .
அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் 100 என்ற நம்பரை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.