செம் மாடர்னாக விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அக்கா மற்றும் தங்கை!
உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டு மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளாக உள்ளவர்கள்.
மேலும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியாகியிருந்தது, அக்ஷரா ஹாசன் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வருடம்தோறும் நடைபெறும் SIIMA 2021 விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது, இதில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தற்போது SIIMA விழா நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தங்கை அக்ஷரா ஹாசனுடன் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள அவர்களின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..