தன்னை விட 2 மடங்கு மூத்த நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ருதி ஹாசன், யார் அந்த ஹீரோ தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.
தமிழில் சூர்யாவுடன் 7-ம் அறிவு மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் லாபம். விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்திருந்த இந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் தான் ஸ்ருதி அடுத்து நடிக்கவிருக்கம் படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே KGF புகழ் பிரஷாந்த் நீல் படத்தில் பிரபாஸ் உடன் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஸ்ருதி.
தற்போதய தகல்வல்கள் படி அவர் தன்னை விட 2 மடங்கு வயதில் மூத்த நடிகரான தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ளார்.