திருமணமான 1 வருடத்திலேயே உயிரிழந்த கணவர், 2வது திருமண நாளில் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த செயல்- புகைப்படம் இதோ
ஸ்ருதி ப்ரியா
சின்னத்திரை, வெள்ளித்திரை எதுவாக இருந்தாலும் உள்ளே நுழைந்த அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைவது கிடையாது.
சிலருக்கு உடனே வாய்ப்பு கிடைத்தாலும் பலர் நிறைய போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு பெரிய இடத்தை அடைகிறார்கள்.
அப்படி சன் டிவியின் நாதஸ்வரம் தொடரில் ராகினி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.
இந்த தொடருக்கு பிறகு பாரதி கண்ணம்மா, வாணி ராணி போன்ற பல சீரியலில் நடித்தார், ஆனால் பெரிய ரீச் இல்லை.
திருமண வாழ்க்கை
ஸ்ருதி சண்முகப்பிரியா, அரவிந்த் என்பவரை திருமணம் செய்த நிலையில் கல்யாணம் ஆன ஒரே ஆண்டிலேயே அவரது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த ஸ்ருதி இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதில் அவர், முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடி வருகிறேன். நீ என் அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக கூறினாலும் நீ என் பக்கத்திலேயே இருப்பது போல நான் நினைக்கிறேன். நீ எப்போதுமே என் அருகில் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன் என பதிவு போட்டுள்ளார்.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
