குக் வித் கோமாளி புகழ் ஸ்ருதிகாவிற்கு என்ன ஆனது, மருத்துவமனையில் உள்ளாரே, வீடியோ... ரசிகர்கள் ஷாக்
ஸ்ருதிகா
மறைந்த மூத்த நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்.
முதன்முதலில் இவர் ஸ்ரீ திரைப்படம் நடித்துள்ளார், ஆனால் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன்பின் மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தித்திக்குதே படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பின் ஸ்ருதிகாவை கேமரா பக்கமே காணவில்லை. அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். சொந்தமாக இவர் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகிறார்.
குக் வித் கோமாளி 3 சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினார்.
மருத்துவமனை
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக பதிவு போடும் ஸ்ருதிகா தனது உடலில் இருந்த பெரிய பிரச்சனைக்காக சர்ஜரி செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
ஆனால் அது என்ன பிரச்சனை என்பதை அவர் குறிப்பிடவில்லை. உடலில் பிரச்சனையுடன் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகும், அதை சரி செய்ய தற்போது மேஜர் சர்ஜரி நடந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.