மனரீதியாக எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு: நடிகை ஸ்ருதி ஹாசன்

By Dhiviyarajan Jan 10, 2023 11:00 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

உலகநாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் 'வால்டர் வீரய்யா', மற்றும் பாலா கிருஷ்ணாவின் 'வீர சிம்ம ரெட்டி' படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன், பாலா கிருஷ்ணாவின் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் சிரஞ்சீவி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இதை குறித்து ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதற்க்கு பதில் அளித்த ஸ்ருதி, "எனக்கு உடல் நிலை சரியாக இல்லை. அதனால் தான் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை" என தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

மனரீதியாக எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு: நடிகை ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan About Her Mental Health Problems

மனவுளைச்சல்

தற்போது இவர் மேலும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார், அதில் "எனக்கு மனரீதியாக சில பிரச்னைகள் இருக்கிறது. வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ நான் நினைத்த படி நடக்க வில்லை என்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகி விடுவேன், அதிக மனவுளைச்சல் அடைந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்து கொள்வேன்" என்று கூறியுள்ளார்.   

மனரீதியாக எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு: நடிகை ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan About Her Mental Health Problems

அம்பானியின் பல கோடி ஆஃபரை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்.. காரணம் என்ன தெரியுமா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US