உடம்பில் தனக்கு பிடித்த பகுதி எது?- நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ
நடிகை ஸ்ருதிஹாசன் 7ம் அறிவு படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர். இசையில் அதிக ஆர்வம் இருந்தாலும் நாயகியாகவே தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு தான் இசையில் ஆர்வம் காட்டி சில ஷோக்களை செய்தார், அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் அவருடன் ஏற்பட்ட காதல் முறிவிற்கு பிறகு படங்களில் அக்கறை காட்டி வந்தார். இப்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.
ஸ்ருதி நடிப்பில் கடைசியாக லாபம் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன.
இந்த நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அதில் ஒரு ரசிகர் உடம்பில் பிடித்த பாகம் எது என கேட்க அதற்கு ஸ்ருதிஹாசன், இதயம், மூளை, கீழ் முழங்கால் என கூறியுள்ளார்.
பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் என ரசிகர்களின் பல கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.