ஏ.ஆர்.ரஹ்மான் உடன் முதல் முறை கூட்டணி சேரும் ஸ்ருதி ஹாசன்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஜெயம் ரவியின் அடுத்த படமான 'காதலிக்க நேரமில்லை' படத்திற்கும் அவர் தான் இசையமைத்து வருகிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் இந்த் படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஜோடியாக நடித்து இருக்கின்றனர்.

ஸ்ருதி ஹாசன்
காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு பாடலை பாட ஸ்ருதி ஹாசனை தேர்வு செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரும் சமீபத்தில் பாடலை பாடி கொடுத்திருக்கிறார்.
சினேகன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். பாடல் ரெக்கார்டிங்கின் போது எடுத்த போட்டோவை சினேகன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
இசையால் இணைந்த இதயங்கள் ...
— Snekan S (@KavingarSnekan) February 29, 2024
கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில்,
ஸ்ருதிஹாசனின் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது..@arrahman @astrokiru @shrutihaasan @RedGiantMovies_ pic.twitter.com/FY3kZlFeS4