மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்கவிருந்த நடிகை.. நயன்தாரா எப்படி உள்ளே நுழைந்தார் தெரியுமா?
RJ பாலாஜி இயக்கி நடித்த படம் மூக்குத்தி அம்மன். அதில் நயன்தாரா தான் அம்மன் ரோலில் நடித்து இருப்பார்.
படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. ஆனால் அதை RJ பாலாஜி இயக்கவில்லை. சுந்தர் சி இயக்க நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் ஆக நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் ஓகே சொன்னார், ஆனால்..
மூக்குத்தி அம்மன் பட கதையை முதலில் ஸ்ருதி ஹாசனிடம் தான் RJ பாலாஜி கூறினாராம். அவரும் ஓகே சொல்ல அவர் நடிப்பதும் உறுதி ஆகி இருக்கிறது.
அதன் பிறகு விக்னேஷ் சிவன் ஒருநாள் RJ பாலாஜியை சந்திக்கும் போது 'யார் யாருக்கோ கதை சொல்ற, நயன்தாராவுக்கு சொல்ல மாட்டியா' என கேட்டாராம்.
அதன் பிறகு RJ பாலாஜி நயன்தாரா வீட்டுக்கு சென்று கதை சொல்லி இருக்கிறார். பாதி கதை கேட்டுவிட்டு உடனே நயன்தாரா தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டாராம். அப்படி தான் நயன்தாரா அந்த படத்திற்குள் வந்தார் என RJ பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
