அன்பானவர், மிகவும் கூலானவர்.. ஸ்ருதி ஹாசன் பாராட்டும் அந்த டாப் நடிகர் இவரா?
ஸ்ருதி ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே மோனிகா என்ற ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். நேற்று இந்த பாடல் வெளியாகி ஹிட் கொடுத்தது.
இவரா?
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " என் அப்பாவும் ரஜினிகாந்த் சாரும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள். ரஜினி சார் கத்தியைப் போல கூர்மையானவர். புத்திசாலி, அன்பானவர் மற்றும் மிகவும் கூலானவர். அவருடன் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
