எல்லோரை போல் நானும் அதை அதிகமாகவே பயன்படுத்துகிறேன்.. நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
ஸ்ருதி ஹாசன்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக ஸ்ருதி ஹாசன் இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சலார் 2 படமும் இவர் கைவசம் உள்ளது.
ஓபன் டாக்
இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "எல்லோரை போலவும், நானும் செல்போனை ரொம்ப ரொம்ப அதிகமாகவே பயன்படுத்துகிறேன். நிறைய வேலைகளுடன் செல்போன் தொடர்பில் இருப்பதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. சில நேரம் செல்போன்களில் சிக்னல் இல்லாமல் போகும்போது வெறுப்பாக இருக்கிறது. சில வேளைகளில் அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது" என கூறியுள்ளார்.