அதை பற்றி கேக்காதீங்க.. நான் திருமணம் பண்ண மாட்டேன்!! கடுப்பான ஸ்ருதி ஹாசன்..
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகனின் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
திருமணமா?
ஸ்ருதி ஹாசனும் சாந்தனு ஹஸாரிகா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டிலும் வசித்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பற்று பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள்?" என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், "நான் கல்யாணம் பண்ண மாட்டேன்.. திருமணம் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்கதீர்கள்" என்று ஸ்ருதி ஹாசன் பதில் அளித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
