என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது!! ட்ரோல்களுக்கு ஸ்ருதி ஹாசன் பதிலடி
ஸ்ருதி ஹாசன்
பிரபல நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன்.
இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் - பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 22 -ம் தேதி வெளியாகவுள்ளது.
பதிலடி
சமீபத்தில் சலார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஸ்ருதி ஹாசன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் என்று கூறியிருந்தார். இவர் சொன்னதை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக ஸ்ருதி ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், எனது நிதானம் பற்றி பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. வாழ்க்கை நன்றாக இருக்கிறது. கடவுள் கனிவானவர் என்று ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.