கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன் ரோல் இதுதான்.. அவரே உடைத்த ரகசியம்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதுதான்
இந்நிலையில், இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் அவரது கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நான் ''இனிமேல்'' மியூசிக் வீடியோவில் நடித்தபோது, லோகேஷ் கனகராஜ் ''கூலி'' ஸ்கிரிப்டை என்னிடம் கூறினார். இப்படத்தில் சத்யராஜ் சாரின் மகளாக நான் நடித்துள்ளேன். கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது" என்று தெரிவித்துள்ளார்.