மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா?
வாரணாசி
பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து RRR என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் மூலம் ராஜமௌலி ஆஸ்கர் மேடை வரை சென்றார். அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம் தான் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, ப்ருத்விராஜ் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ளது.

சம்பளம்
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியீட்டு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத அளவிற்கு படு பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே ரூ. 27 கோடி செலவு ஆகியுள்ளதாம். அந்த Led ஸ்டேஜிற்காக மட்டுமே ரூ. 8 கோடி செலவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் Terrific Performance ஒன்று கொடுத்திருந்தார்.

இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
அதற்காக ஸ்ருதிஹாசனுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.