என் திருமணம் அப்படி தான் நடக்கும்.. ஸ்ருதி ஹாசன் சொன்ன விஷயம்
ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் அவர்.
தற்போது 39 வயதாகும் அவர் இதுவரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். இருப்பினும் இதற்கு முன் இரண்டு முறை காதலித்து அதன் பிறகு பிரேக் அப் செய்திருக்கிறார்.
அவர் காதலர் உடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்ததும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

திருமணம்
திருமணம் செய்து கொள்வது பற்றி சமீபத்தில் பேசிய ஸ்ருதிஹாசன், மக்கள் பிரம்மாண்டமாக திருமணம் செய்வதற்காக வீண் செலவு செய்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் தான் ஒருவேளை திருமணம் செய்தால் அதை பதிவு திருமணமாகத்தான் எளிமையாக ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று செய்து கொள்வேன் என கூறியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் சொன்ன இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri