ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் கிடைத்த மார்க்கெட்.. இதை அவரே எதிர்பார்க்கலையா?

By Parthiban.A Dec 27, 2022 12:30 PM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன் முதலில் ஹீரோயினாக நடிக்க வந்தபோது அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு காரணம் அவர் கமல்ஹாசனின் மகள் என்பதால் தான். அவர் தொடர்ந்து படங்கள் நடித்தார் என்றாலும், தமிழ் சினிமாவில் அவரால் பெரிய வெற்றி கொடுக்கமுடியவில்லை.

அதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டிருந்தது. அவரது காதல் பிரேக்கப் உள்ளிட்ட பல விஷயங்களும் அதற்கு காரணம் எனலாம். 

 மீண்டும் பிஸி

இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் மீண்டும் பிஸியாக மாறி இருக்கிறார். அவர் நடிப்பில் வரும் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கில் வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி அகிய படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

பொங்கலுக்கு தான் நடித்த இரண்டு பெரிய ஹீரோ படங்கள் வெளியாவது தனக்கு ஸ்பெஷல் தான் என கூறி இருக்கும் ஸ்ருதி ஹாசன், அடுத்து ஜனவரியில் பிரபாஸின் சளார் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் கிடைத்த மார்க்கெட்.. இதை அவரே எதிர்பார்க்கலையா? | Shruti Haasan Two Film Releases For Pongal

நான் எதிர்பார்க்கவில்லை

அது மட்டுமின்றி ஸ்ருதி ஹாசன் ஒரு ஆங்கில மொழி படத்திலும் நடித்து இருக்கிறார். அதற்காக இரண்டு மாதங்கள் அவர் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பங்கேற்றார். 

தற்போது பிஸியாக நடித்து வருவது பற்றி பேசிய ஸ்ருதி "நான் முதல் படம் நடித்தபோது, அடுத்து 2வது, 3வது படங்கள் நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன், அதில் பல வெற்றிகள் மற்றும் தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். அதன் மூலமாக பல பாடங்கள் கற்று, கெரியரில் வளர்ச்சி பெற முயற்சிக்கிறேன்" என கூறி இருக்கிறார். 

ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் கிடைத்த மார்க்கெட்.. இதை அவரே எதிர்பார்க்கலையா? | Shruti Haasan Two Film Releases For Pongal

5 வயது ஆகும் அசின் மகள்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US