விமான நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் தவித்த ஸ்ருதி ஹாசன், காப்பற்ற வந்த ஆண் நண்பர்..! வீடியோவுடன் இதோ..
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார்,
கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. கடைசியாக இவர் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று ஸ்ருதி ஹாசன் அவரின் பிறந்தநாளை அவரின் ஆண் நண்பருடன் கொண்டாடியது மட்டுமின்றி அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசன் டிக்கெட்டை மறந்துவிட்டு விமான நிலையத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.
பின்னர் அவரின் ஆண் நண்பர் அவருக்கு ஓடிவந்து டிக்கெட்டை கொடுத்துள்ளார், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.