ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று ரோஜா. அதில் அர்ஜுன் ரோலில் நடித்து வரும் சிபு சூர்யன் மற்றும் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரி இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சிபு சூர்யன் திடீரென ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அதை அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார்.
இது எளிதான முடிவல்ல
"நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்."
"Goodbye சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், என மனதிற்கு நெருக்கமானது."
"உங்கள் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை entertain செய்கிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு தேவை" என சிபு சூர்யன் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
