விஜய் ஆன்டனி இல்லை.. பிச்சைக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்
2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த படம் பிச்சைக்காரன். இப்படம் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படம் கடந்த மே மாதம் 19ம் தேதி அன்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், இப்படம் வசூலும் அதிகம் குவித்து உள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் ஆண்டனி தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

சித்தார்த்
பிச்சைக்காரன் படத்தை பற்றி இயக்குனர் சசி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பிச்சைக்காரன் என படத்துக்கு பெயர் வைப்பதற்கு முன்னால் படத்தின் கதையை முதலில் நடிகர் சித்தார்த் அவர்களுக்கு சொல்லப்பட்டது. அவரும் கதைக்கு ஏற்றவாறு சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.
2016ம் ஆண்டு திரைக்கு வந்த பிச்சைக்காரன் கதை 2008ம் ஆண்டு தயாராகிவிட்டது. ஆனால் கதை எனக்கு புரியவில்லை என சித்தார்த் சொல்ல பின் இப்படத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் நடித்தார். இதில் நடிக்காததற்கு அவருக்கு வருத்தம் உள்ளது என சசி கூறி இருக்கிறார்.
