சாய்னா நேவால் பற்றி ஆபாச வாரத்தை சொன்னாரா சித்தார்த்? சர்ச்சைக்கு விளக்கம்
நடிகர் சித்தார்த் சமீப காலமாக அரசியல் ரீதியான விமர்சனங்களையும் வெளிப்படையாக ட்விட்டரில் பேசி வருகிறார். சில நேரங்களில் அதுவே அவரை சர்ச்சையில் சிக்க வைத்து விடுகிறது. தற்போது பாஜக கட்சியை சேர்ந்த பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி கமெண்ட் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
கடந்த வாரம் பஞ்சாப்பில் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக எழுந்த பிரச்சனை பற்றி சாய்னா ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டு இருக்கிறார். மோடி மீது நடந்த தாக்குதலுக்கு தான் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார் சாய்னா.
பிரதமர் மீது தாக்குதலே நடத்தப்படவில்லை, அவர் கார் அருகில் சென்றவர்கள் எல்லோருமே பாஜக கட்சி தொண்டர்கள் என வீடியோ மூலமாக தெரியவந்திருக்கிறது. சாய்னாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சித்தார்த் பதிவிட்டு இருந்தார்.
அதில் அவர் பயன்படுத்தி இருந்த வார்த்தை பற்றி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது பற்றி விளக்கம் கொடுத்திருக்கும் சித்தார்த் "நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை "COCK & BULL" அர்த்தத்தில் தான் சொன்னேன்" என தெரிவித்து உள்ளார்.
"COCK & BULL"
— Siddharth (@Actor_Siddharth) January 10, 2022
That's the reference. Reading otherwise is unfair and leading!
Nothing disrespectful was intended, said or insinuated. Period. ??