திடீரென காதலரை பிரேக்கப் செய்த கியாரா அத்வானி: ரசிகர்கள் ஷாக்
MS தோணியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலமாக பாப்புலர் ஆனவர் கியாரா அத்வானி. அவர் அதற்கு பிறகு மகேஷ் பாபு ஜோடியாக 'பரத் எனும் நான்' படத்தில் நடித்து இருந்தார். அவருக்கு தென்னிந்தியாவிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் தற்போது அவர் பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
கியாரா அத்வானி பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார் என தொடர்ந்து கூறப்பட்டது வந்தது. அவர்களும் நெருக்கமாகவே இருந்து வந்தனர். ஆனால் காதலை வெளிப்படையாக அறிவிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யலாம் என கூட ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது. அதற்கான காரணமும் என்ன என்பது தெரியவில்லை. பிரேக்கப் நியூஸ் தற்போது அவர்களின் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

