ராஜா ராணி 2 சீரியலில் சித்து வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரா?- அவரே வருத்தமாக கூறிய விஷயம்
விஜய் தொலைக்காட்சியில் பழைய சீரியலின் பெயரில் இரண்டாம் பாகமாக ஓடிக் கொண்டிருக்கிறது ராஜா ராணி 2 சீரியல்.
முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா தான் இதிலும் நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சித்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரது ஜோடி பொறுத்தமும் நன்றாக இருக்கிறது என்பது மக்களின் கருத்து.
சீரியல் தொடங்கப்பட்டு இதுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது சீரியல் குறித்து நமக்கு தெரியாத ஒரு தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால் இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் சித்து வேடத்தில் முதலில் நடிக்க கமிட்டானது சபரி என்ற நடிகர் தானாம்.
ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக இப்போது சித்து நடித்து வருகிறார். இந்த சீரியலை போல் நிறைய வாய்ப்புகளை மிஸ் செய்ததாக அவரே வருத்தமுடன் கூறியுள்ளார்.
சபரி வேலைக்காரன் சீரியலில் இப்போது முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.