சித்து-ஸ்ரேயா இணைந்து நடிக்கும் அழகிய தொடர் புரொமோ... டைட்டில் என்ன தெரியுமா?
சித்து-ஸ்ரேயா
கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடரில் ஒன்றாக நடித்ததன் மூலம் பழகியவர்கள். சீரியல் முடிவதற்குள் இருவருக்கும் காதல் ஏற்பட பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
பின் சித்து, விஜய் டிவி ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார், அந்த தொடரில் முடிந்துவிட்டது. ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார், அந்த தொடரும் எப்போதோ முடிந்துவிட்டது.
சீரியல்களை முடித்தவர்கள் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்துவது, யூடியூபில் வீடியோக்கள் பதிவிடுவது என பிஸியாக இருந்தார்கள்.
புதிய தொடர்
இந்த நிலையில் சித்து மற்றும் ஸ்ரேயா இணைந்து புதிய தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். தற்போது அவர்கள் நடிக்கும் புதிய தொடரின் புரொமோ வெளியாகியுள்ளது.
அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகள் என்ற கருவோடு தொடரின் புரொமோ வெளியாகியுள்ளது.
இதோ வள்ளியின் வேலன் தொடரின் புதிய புரொமோ,