பாக்ஸ் ஆபிஸ்: ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 06, 2026 03:47 AM GMT
Report

Sigma movie 4 days box office: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் வெளிவந்து 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்மா

தளபதி விஜய் போல் ஹீரோவாக ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்த்த நிலையில், தனது தாத்தா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை போல் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ள சஞ்சய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பாக்ஸ் ஆபிஸ்: ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் | Sigma Movie 4 Days Box Office

குழந்தைகள், எதிர்கால தாய்மை குறித்து பேசிய நடிகை தமன்னா.. இணையத்தில் வைரல்

குழந்தைகள், எதிர்கால தாய்மை குறித்து பேசிய நடிகை தமன்னா.. இணையத்தில் வைரல்

ஆனால், சிக்மா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. திரைக்கதை வலுவாக இல்லை, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சுமார் என இப்படத்தின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் சிக்மா படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்கிறது.

வசூல் விவரம்

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா கடந்த வாரம் திரைக்கு வந்த நிலையில், இதுவரை 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிக்மா படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 6.5 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் | Sigma Movie 4 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூல் என கூறப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சிக்மா டிசாஸ்டர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US