பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்
Sigma movie 6 days Box office Collection: சிக்மா படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிக்மா
ஜேசன் சஞ்சய்யின் அறிமுக இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் சிக்மா. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, பிரபல தென்னிந்திய நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் சிக்மாவும் ஒன்றாகும். அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
சிக்மா படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்களை தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 6 நாட்களை கடந்துள்ள சிக்மா இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 நாட்களில் சிக்மா திரைப்படம் உலகளவில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.