சிக்மா: திரை விமர்சனம்

By Karthick Raja Oct 02, 2026 09:00 AM GMT
Report
Sigma Movie Review: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள சிக்மா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி வந்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

வில்லன் சம்பத்துக்கு (ரெட்டி) சொந்தமான ரூ. 1000 கோடி மாஃபியா பணம் உள்ள லாக்கர் வெளிநாட்டில் உள்ளது. அந்த லாக்கரை திறக்க இரண்டு சாவிகள் உள்ளன. ஒரு சாவியை ரெட்டி வைத்துக்கொள்ள, மற்றொரு சாவியை எழில் என்பவரிடம் தருகிறார்.

அங்கிருந்து சிக்மா படம் தொடங்குகிறது. கதாநாயகன் சந்தீப் கிஷன் தனது தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறார். இருப்பினும், தன் தாயின் நினைவாக உள்ள நூலகத்தை நடத்திக்கொண்டே இந்த கடன்களை எப்படியாவது அடைத்துவிட வேண்டும் என முயற்சி செய்கிறார்.

சிக்மா: திரை விமர்சனம் | Sigma Movie Review

கடனை அடைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தவித்து நிற்கும் சந்தீப், கேசினோவிற்கு சென்று சூதாட்டம் ஆடுகிறார். முதலில் வெற்றிபெறுவது போல் ஆட்டம் சென்று, இறுதியில் இவரிடம் இருந்து மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் இழந்துவிடுகிறார்.

இதன்பின் பலராலும் தேடப்படும் பென் டிரைவ் மற்றும் லாக்கரை திறக்கக்கூடிய சாவி சந்தீப் கிஷனிடம் கிடைக்க, இதை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு எடுக்கிறார். சந்தீப் கிஷனிடம் அந்த லாக்கரின் சாவி எப்படி வந்தது, அந்த பென் டிரைவில் இருந்த விஷயம் என்ன? தனது கடனை முழுமையாக அடைத்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

அறிமுக இயக்குநரான ஜேசன் சஞ்சய் எடுத்துக்கொண்ட கதைக்களம் வலுவாக இருந்தாலும், அதை திரைக்கதையில் வலுவாக வடிவமைக்கவில்லை.

ஒரு ஹெய்ஸ்ட் திரில்லர் படம் என்றால் விறுவிறுப்புக்குப்பஞ்சம் இருக்கவே கூடாது. ஆனால், சிக்மா முதல் பாதியிலும் சரி, இரண்டாம் பாதியிலும் சரி எந்த ஒரு பரபரப்பையும் தரவில்லை. திரைக்கதையின் மீதான அணுகுமுறை இன்னும் வலுவாக இருந்திருக்க வேண்டும்.

சிக்மா: திரை விமர்சனம் | Sigma Movie Review

படத்தில் பல இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. இடைவேளைக்கு முன் வரும் ஆக்ஷன் காட்சி சிறப்பாக இருந்தாலும், அதன்பின் படம் சூடு பிடிக்கவில்லை. இதனால் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.

ஹீரோவுக்கு மாஸ் வரவேண்டும் என்றால், முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் அழுத்தமும், மாஸும் இருக்க வேண்டும். அது சிக்மா படத்தில் மிஸ்ஸிங். இதுவே மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது.

சிக்மா: திரை விமர்சனம் | Sigma Movie Review

மேலும், கதாபாத்திரங்களுடன் எமோஷனல் கனெக்ட் இல்லை. சந்தீப் கிஷன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஆனாலும், ஹீரோ கதாபாத்திரத்துடன் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை.

மேலும் சம்பத், ஃபரினா அப்துல்லா, அன்பு தாசன், ஷிவ் பண்டிட் என அனைவரும் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. தமனின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே. ஒளிப்பதிவு இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். டெக்னீக்கல் ஒர்க்ஸ் முழுமையான திருப்தியை தரவில்லை. 

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • நடிகர்களின் பங்களிப்பு
  • கதைக்களம்
  • இடைவேளைக்கு முன் வரும் ஆக்ஷன் காட்சி

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • ஒர்க் அவுட் ஆகாத எமோஷன்
  • வலுவில்லாத திரைக்கதை
  • அழுத்தம் இல்லாத வில்லன் கதாபாத்திரம்
  • சுவாரஸ்யம் குறைவு

மொத்தத்தில் 'சிக்மா' ஏமாற்றம்.

சிக்மா: திரை விமர்சனம் | Sigma Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US