சிக்கந்தர் படத்தின் மிக குறைவான வசூல்.. சல்மான் கானுக்கு இப்படியொரு நிலைமையா
சிக்கந்தர்
இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர்.
இப்படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட் ஸ்டார் சல்மான் கானுடன் கைகோத்திருந்தார் முருகதாஸ். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ், கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
சென்ற வாரம் வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்புடன் இப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், இப்படத்தின் வசூல் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மிக குறைவான வசூல்
ஆம், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் சிக்கந்தர் திரைப்படம் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 160 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவாக வசூல் என கூறப்படுகிறது.