சல்மான் கான், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தின் டீசர்..
சிக்கந்தர்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் முதல் முறையாக சல்மான் கானுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் சிக்கந்தர்.
இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நேஷ்னல் க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் டீசரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இன்று சிக்கந்தர் படத்தின் மாஸ் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதோ அந்த டீசர்..