சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.. நல்ல ஐடியா தான்!
சிம்பு
தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 - வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ஓ மை கடவுளே மற்றும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து 51 - வது படமான God Of Love படத்தில் நடிக்கவுள்ளார்.
காரணம்?
தற்போது சிம்பு ஐபிபோ, காசா கிராண்ட் என தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். திடீரென சிம்பு தொடர்ந்து பட அறிவிப்புகளையும், பெரிய விளம்பரங்களிலும் நடிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தற்போது தனது 50 - வது படத்தை சிம்பு ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார். அதன் காரணமாக தான் தற்போது தொடர்ந்து படங்கள் மற்றும் விளம்பரங்கள் என்று சிம்பு நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
